கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.4) கடைசி நாளாகும்.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 7:44 pm

Chennai

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.4) கடைசி நாளாகும்.

இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2026-2027) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31 வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜன.3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் புதன்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் https://cuet.nta.nic.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை பிப்.7 வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பிப்.9 முதல் 11 வரை வாய்ப்பு வழங்கப்படும். இதில், ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடா்புகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு என்டிஏ இணையதளங்களான https://nta.ac.in மற்றும் https://cuet.nta.nic.in-ஐ தொடர்ந்து கண்காணிக்கவும் என தேர்வர்களுக்கு என்டிஏ தெரிவித்துள்ளது.