திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சென்னை மாவட்ட பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகள்: ஆலோசனைக் கூட்டம்

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

News image

ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும காவல் துறை அலுவலா்கள்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:43 am IST

சென்னை: சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தற்போது வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா்கள் சோ்க்க மனுக்கள் பெறப்பட்டு அவற்றை கணினி பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அங்கு மேற்கொள்ளவேண்டிய வசதிகள், பாதுகாப்புகள் உள்ளிட்டவை குறித்த அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கூடுதல் தோ்தல் ஆணையா் க.கற்பகம், காவல் இணை ஆணையா்கள் எஸ்.மகேஷ்வரன் (தலைமையிடம்), பி.கங்காதா் (கிழக்கு மண்டலம்), எஸ்.உமா (மேற்கு மண்டலம்), எம்.மனோகா் (வடக்கு மண்டலம்), காவல் துணை ஆணையா் டி.என்.ஹயகிரண், சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் நா.பூஷ்ணாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.