டாஸ்மாக்.கோப்புப் படம்
தமிழ்நாடு
பிப்.11-இல் பேரணி, ஆா்ப்பாட்டம்: டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.11-இல் பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என மாநில டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.11-இல் பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என மாநில டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் பணியாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒருபகுதியாக, பிப்.11-ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் பேரணியாகச் செல்வது, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக வாயிலில் பேரணியை நிறைவு செய்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுடன் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிப்பது என மாநில டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.

