தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,040 உயர்வு.. வெள்ளியும் கிலோ ரூ. 20,000 உயர்ந்தது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்துள்ளதைப் பற்றி...
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,040 உயர்வு.. வெள்ளியும் கிலோ ரூ. 20,000 உயர்ந்தது!
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 5,040 உயர்ந்து விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக சவரனுக்கு ரூ. 20,000-க்கும் அதிகமாக சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்த அறிவிப்பு வெளியான நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வாரத்தின் முதல்நாளான திங்கள் கிழமை தங்கம் விலையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ. 2,560 உயர்ந்தது. இன்று தங்கம் விலை மீண்டும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிராமுக்கு ரூ. 630 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,900-க்கும் ஒரு சவரனுக்கு ரூ. 5,040 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,19,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று (பிப்.3) காலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து மாலையில் மீண்டும் ரூ. 20 அதிகரித்து போலவே இன்று (பிப்.4) காலை கிராமுக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 320-க்கும், கிலோவுக்கு ரூ. 20,000 அதிகரித்து ரூ. 3,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. சமீபகாலமாகவே, தங்கம் மற்றும் வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தில் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

முதல்முறையாக கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர், சற்று குறைந்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தங்கத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Summary

In Chennai, the price of 22-karat gold rose by ₹5,040 per sovereign on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com