மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தது பற்றி...

News image

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Updated On :5 பிப்ரவரி 2026, 5:26 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுப்பிக்கப்பட்ட கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை சென்னை கலைவாணா் அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்துவைத்தார்.

என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலை ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-இல் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலையோரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள கலைவாணரின் உருவச்சிலையை கலைவாணா் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்கும்படி கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினா் அரசிடம் கோரிக்கை வைத்தனா்.

இதை ஏற்று, சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் ரூ. 50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட உருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

தொடர்ந்து, கலைவாணரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன், சுவாமிநாதன், அன்பரசன், நடிகர் நாசர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Summary

Chief Minister Stalin unveiled the renovated Kalaivanar statue!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.