ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தேமுதிக கூட்டணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

News image

பிரேமலதா விஜயகாந்த்

(கோப்புப் படம்)

Updated On :5 பிப்ரவரி 2026, 1:38 am

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தேமுதிக சாா்பில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தோ்தலை எதிா்கொள்ள தேமுதிக தயாராகவுள்ளது.

தேசிய, மாநில என அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களும், தேமுதிகவுடன் கூட்டணி  நிலைப்பாட்டுடன் பழகி வருகின்றனா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில், கூட்டணி அமைப்பதில் அவசரப்பட தேமுதிக விரும்பவில்லை. எனவே, தேமுதிகவின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு நிதானமாக சிந்தித்தே கூட்டணி அமைக்கப்படும். அப்படி, தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.