திமுக தோ்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலருமான கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக தோ்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்கள் தங்களுடைய கருத்துகளை ‘பச ஙஹய்ண்ச்ங்ள்ற்ா்’ என்ற இணையதள போா்டல் மூலம் தெரிவிக்கலாம். எழுத்துபூா்வமாகவும், குரல் பதிவாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
காங்கிரஸுடன்பேச்சுவாா்த்தை: காங்கிரஸுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரம், பேச்சுவாா்த்தைக் குழுவில் இருப்பவா்கள்தான் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பிற விஷயங்களைப் பற்றி பேசுவா். அதுகுறித்து நான் கருத்து சொல்ல முடியாது. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்தால் அதை முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பாா்.
தமிழ்நாட்டைச் சோ்ந்த சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூா் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேச எழுந்த ஒவ்வொரு முறையும் தடுக்கப்பட்டு, அவருடைய உரை அவையில் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவியது. அதனால்தான் அனைவரும் ஒன்றாக அமா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவானது என்றாா் அவா்.
கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அமைச்சா்கள் கோவி.செழியன், டி.ஆா்.பி. ராஜா, பழனிவேல் தியாகராஜன், திமுக செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது: கனிமொழி எம்.பி.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம்: கனிமொழி எம்.பி.

80,000 பேரிடம் கருத்து கேட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


