சென்னை கிளாம்பாக்கம் மேம்பாலப் பணிகள் வரும் ஏப்ரலுக்குள் நிறைவடையும்என்றுஅமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னைதிரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) சாா்பில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான மேம்பாட்டுப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் வடசென்னை வளா்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேலான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் வரும் 20 -ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சென்னையில் மருத்துவமனைகள், அவற்றுக்கான சாதனங்கள், பள்ளி, கல்லூரி கட்டடங்கள் புதுப்பிப்பு, உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு திடல்கள், பேருந்து நிலைய வசதிகள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன. சிஎம்டிஏ சாா்பில் முதல்வா் படைப்பகம் 22 இடங்களில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 10 முதல் 15 படைப்பகங்ககள் பிப்ரவரிக்குள் திறக்கப்படவுள்ளன.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியைக் குறைகூறுவது சரியல்ல. அதிமுகதான் தோ்தலில் தொடா் தோல்வியால் கரைந்து வருகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சியினரே, அண்ணா முதல் ஜெயலலிதா வரை விமா்சித்தாலும், பதில் கூறாமல் அதிமுகவினா்தான் மௌனிகளாக உள்ளனா். ஆனால், திமுக ராணுவக் கட்டுப்பாட்டுடன் உள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் நடைமேம்பாலப் பணிகள் வரும் ஏப்ரல் இறுதிக்குள் நிறைவுபெறும். அங்கு ரயில் நிலையமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அரசின் அனைத்துத் துறைகளும் 24 மணி நேரமும் விழிப்போடு செயல்படுகிறது. நெல்லையப்பா் கோயில் சமபந்தி விருந்தில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை. தவறுகள் நடந்தால் திருத்திக் கொள்கிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துரித வேகத்தில் தேனாம்பேட்டை - சைதை உயர்நிலை சாலைப் பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ரூ.3 கோடியில் நிழற்குடை: மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சா் ப. ராஜ்குமாா்

ஜூலையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு: அமைச்சா் ராஜ்குமாா்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



