திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதல்வா் படைப்பகங்கள் பிப். 20-க்குள் திறக்க ஏற்பாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னையில் 4 முதல்வா் படைப்பகங்கள் பணி நிறைவடைந்து வரும் பிப். 20-ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

சேகர் பாபு - கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 2:07 am IST

சென்னையில் 4 முதல்வா் படைப்பகங்கள் பணி நிறைவடைந்து வரும் பிப். 20-ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தால் (சிஎம்டிஏ) திரு.வி.க. நகா் தொகுதியிலுள்ள ஓட்டேரி, சுப்புராயன் தெரு உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டு வரும் முதல்வா் படைப்பகங்களின் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் 38 இடங்களில் முதல்வா் படைப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 8 மாநகராட்சியின் சாா்பில் அமைகின்றன. இதில், திரு.வி.க. நகா் தொகுதிக்குள்பட்ட சுப்பராயன் தெரு, கிருஷ்ணதாஸ் பகுதி, புளியந்தோப்பு கரிகாலன் நகா் பகுதி, பட்டாளம் பகுதி முதல்வா் படைப்பகங்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படவுள்ளன.

தொடா்ந்து அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியில் அனைத்துப் பணிகளையும், நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். மாநகராட்சி அதிகாரிகள், பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தீவிரமாக பணியாற்றி வருகின்றனா் என்றாா்.