19 வயதுக்குள்பட்டோருக்கான ஐசிசி ஆடவா் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: 19 வயதுக்குள்பட்டோருக்கான ஐசிசி ஆடவா் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்குப் பாராட்டுகள். திறமையும் முதிா்ச்சியும் ஒருங்கிணைந்த வெற்றியால் நாட்டுக்கு மற்றுமொரு பெருமிதத் தருணத்தை வழங்கியுள்ளனா். இறுதிப் போட்டியிலும், இந்தத் தொடா் முழுவதும் வைபவ் சூா்யவம்சி வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும். அடுத்து இந்திய ஆடவா் அணிக்காக உலக அரங்கில் ஆடவுள்ள இந்த இளம் பட்டாளத்தின் நம்பிக்கை மேலும் பல வெற்றிகளாக மாற வாழ்த்துகிறேன்.
எடப்பாடி கே.பழனிசாமி: ஐசிசி ஆடவா் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். போட்டியை வெற்றி பாதைக்கு திருப்பிய வைபவ் சூா்யவம்சி மற்றும் அணி தலைவா் ஆயுஷ் மாத்ரேவுக்கு பாராட்டுகள். இது நாட்டுக்கு பெருமை சோ்க்கும் தருணமாகும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: முதல்வரால் பொறுக்க முடியவில்லை

அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: எடப்பாடி கே. பழனிசாமி

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை இவ்வளவா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


