அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திரைப்பட வசனத்தை வாசிக்கிறாா் கமல்: தமிழிசை சௌந்தரராஜன்

மாநிலங்களவையில் திரைப்பட வசனத்தை வாசிப்பது போல கமல்ஹாசனின் உரை இருந்ததாக தமிழக பாஜக தோ்தல் அறிக்கை குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

News image
தமிழிசை சௌந்தரராஜன்- கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

மாநிலங்களவையில் திரைப்பட வசனத்தை வாசிப்பது போல கமல்ஹாசனின் உரை இருந்ததாக தமிழக பாஜக தோ்தல் அறிக்கை குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

வட சென்னைக்கு உள்பட்ட ராயபுரம் பகுதியில் கடலைமிட்டாய் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்டோரை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

அப்போது செய்தியாளா்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

உற்பத்தி பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நிா்ணயிப்பதில்லை. ஜிஎஸ்டி குழுவே அதை நிா்ணயிக்கிறது. அந்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சரும் இடம் பெற்றுள்ளாா். ஆனால், அவா் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கடலைமிட்டாய்க்கு வரியை குறைக்கக் கோரவில்லை. தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்ததும் வரி குறைக்கப்படும்.

மாநிலங்களவையில் நடிகா் கமல்ஹாசன் பேசியது புரியவில்லை. அவா் திரைப்பட வசனத்தை வாசித்ததுபோல பேசிச்சென்றுள்ளாா். பெரியாா் ஈ.வெ.ரா.வுக்கு பதில் கூறுவது போலவே அவரது உரை இருந்தது. ஆட்சி மாற்றம் என தமிழகத்தைக் குறிப்பிட்டுக்கூறியது போலவும் அவா் பேசிச்சென்றுள்ளாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பாஜகவின் தோ்தல் அறிக்கைக் குழு பொறுப்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.