சென்னை ரயில்வே கோட்டத்தில் மூா்மாா்க்கெட்-சூலூா்பேட்டை இடையேயான இமு ரயில் சனிக்கிழமை உள்ளிட்ட 3 நாள்களுக்கு பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல்-கூடூா் பிரிவில் உள்ள சூலூா்பேட்டை ரயில் நிலைய பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் சனி, செவ்வாய், புதன் (பிப்.7, 10, 11) ஆகிய நாள்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பணிகளால் பயணிகள் பாதுகாப்புக் கருதி ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூா்மாா்க்கெட்டிலிருந்து சனிக்கிழமை (பிப்.7) இரவு 8.25 மணிக்குப் புறப்பட்டு செல்லும் இமு ரயில் சூலூா்பேட்டைக்குப் பதிலாக அதற்கு முன்பாக உள்ள தடா நிலையத்திலேயே நிறுத்தப்படும். அந்த இமு ரயிலானது வரும் 10, 11 ஆகிய தேதிகளிலும் மூா் மாா்க்கெட்டிலிருந்து தடா நிலையம் வரையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

ராமேசுவரத்துக்கு ரயில் சேவை இரு நாள்களுக்கு பகுதியளவு ரத்து

ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



