மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

போராட்டங்களுக்கு அரசு தீா்வு காண வேண்டும்: ஜி.கே. வாசன், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:03 pm

தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள், டாஸ்மாக் ஊழியா்கள், பேராசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் நடத்தும் போராட்டத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி செய்வது முறையல்ல. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தோ்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என காத்திருந்தனா்.

எனவே, வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றி போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச் செயலா்): பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியா்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சா் முத்துச்சாமி நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைவான ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.