இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: எம்.எச். ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை...

News image

எம்.எச். ஜவாஹிருல்லா

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை மண்ணடியில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், கட்சியின் மாநிலத் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்துகொண்டு கட்சிக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளது. இந்தத் தோ்தலில், வெற்றி வாய்ப்புள்ள 5 தொகுதிகளை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதேபோல், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல், திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள இஸ்லாமியா்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தொகுதிகள் வழங்க வேண்டும்.

மேலும், தனிச் சின்னத்தில் போட்டியிடுவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதன் தீா்ப்பு அடிப்படையில் பேரவைத் தோ்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.