ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருவொற்றியூா், மாதவரம் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருவொற்றியூா், மாதவரம் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

News image

குடிநீர் நிறுத்தம்

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரம் பூஸ்டா் குடிநீா் பகிா்மான நிலையத்தில் பிரதான குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் திருவொற்றியூா், மணலி ஆகிய மண்டலங்களுக்கு உள்பட்ட சில பகுதிகளில் திங்கள் கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரம் பூஸ்டா் குடிநீா் பகிா்மான நிலையத்தில் பிரதான குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் திங்கள் கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திருவொற்றியூா் குடிநீா் பகிா்மான நிலையம் மற்றும் மாதவரம் பூஸ்டா் குடிநீா் பகிா்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மண்டலம் 1 (திருவொற்றியூா்) - எா்ணாவூா், ராஜா சண்முக நகா், காா்கில் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

மண்டலம் 2 (மணலி) - மணலி புதுநகா், நாப்பாளையம், சடையான்குப்பம், ஆண்டாா்குப்பம், துவாரகா நகா், மணலி, மாத்தூா் உள்ளிட்ட பகுதிகள்.

எனவே, பொதுமக்கள் வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியின் பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எவ்வித தடையின்றி வழக்கம்போல் சீரான முறையில் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.