டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3 ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று (பிப்.8) காலை நடைபெறவிருந்தது.
தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வுகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்தனம், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கு தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் 700-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கல் தேர்வர்களை அங்கிருந்து அமைதியாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
Summary
Following the postponement of the TNPSC Group 2 and 2A main examinations across Tamil Nadu, candidates staged a protest in Poonamallee, Chennai on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செப்.6-இல் குரூப் 1 தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தவெக அரசும் இப்படியா? குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

குரூப் 1 முதல்நிலை தோ்வு: நாளை இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

ஜூன் 4 முதல் குரூப் 1 தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




