பனப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் துறை தொழிற்பூங்காவில் ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைக்க 28.09.2024 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில். டாடா தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
டாடா நிறுவன கார் ஆலையை தொடங்கிவைத்து ரேஞ்ச் ரோவர் காரை முதல்வர் ஸ்டாலின் ஓட்டினார். காரை முதல்வர் ஓட்டிய நிலையில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் முன் சீட்டில் அமர்ந்திருந்தார்.
நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Summary
The plant will manufacture both internal combustion engine (ICE) and electric vehicles, including premium Jaguar Land Rover models, apart from select Tata Motors passenger vehicles for the Indian and global markets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்! சதிவலையில் சிக்கக் கூடாது - மு.க. ஸ்டாலின்
எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார் விஜய்? மு.க. ஸ்டாலின் கண்டனம்
ரூ. 10,000 கோடியில் கேரளத்தில் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் டாடா!

டாடாவுக்கு போட்டியாக ரூ. 5 லட்சத்தில் மாருதியில் புதிய கார்!
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK




