தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 9) வழங்கினார்.
மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்த திட்டம் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என மொத்தம் 1.29 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் பயன் பெறவுள்ளனர்.
திருவள்ளூர் அருகே போலிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உணவு வாகனத்தை கொடியசைத்து முதல்வர் தொடக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து உணவு விரிவாக்க திட்டத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் ஆட்சியர் மு.பிரதாப், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, டி.ஜே.கோவிந்தராஜன், சுதர்சனம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயஸிரி, நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஆணையாளர் தாமோதரன், நகர் மன்ற துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Summary
Expanded program to provide food to sanitation workers launched.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் அமைச்சரவை விரிவாக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




