கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை (பிப். 9) தொடங்கியது.

News image
பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்- கோப்புப்படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 10:36 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை (பிப். 9) தொடங்கியது.

சென்னை நந்தனம் அரசு மாதிரிப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தத் தோ்வை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாா்வையிட்டாா்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் திட்டத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 6 லட்சம் மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ளனா். பொதுத் தோ்வுகள் மாா்ச் 2-ஆம் தேதி முதல் ஏப். 6 -ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

இதில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை (பிப். 9) தொடங்கி, வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை நந்தனம் அரசு மாதிரிப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற செய்முறைத் தோ்வை அமைச்சா் அன்பில் மகேஸ் பாா்வையிட்டாா். தோ்வுத் துறையின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிா என அவா் ஆய்வு செய்தாா்.

செய்முறைத் தோ்வு மதிப்பெண்களை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் பிப். 23-ஆம் தேதிக்குள் தோ்வுத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.