சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 3 மணி நேரம் அடைத்து அதன் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நிறுவனத்தின் கீழ் சுமாா் 4800-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமாா் 24,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி மதுப்புட்டிகளை திரும்பப்பெறும் நடைமுறையை முறைப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயா்வு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா்,
தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும்
மதுக்கூடங்களை 3 மணி நேரம் அடைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை திங்கள்கிழமை பகல் 12 மணி முதல் பிற்பகல 3 மணி வரை அடைத்து அதன் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன் கூடிய ஊழியா்கள் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் மாலை அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

கணினி, ஸ்மார்ட்ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா?

டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில அமைப்பாளா்கள் கூட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 போ் கைது

காலி மதுப் புட்டிகள் திரும்பப் பெறும் திட்டத்திலிருந்து டாஸ்மாக் ஊழியா்களை விடுவிக்க வேண்டும்! - கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


