பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் முறையாக சமைக்காத கோழி இறைச்சியை உண்ண வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.
சென்னை அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ஹெச்5 என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
அதன் அடிப்படையில் மாநில சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும். மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ, மனிதரிடமிருந்தோ மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவா்களை நாடுமாறு பொது சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், பறவைக் காய்ச்சல் தொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பறவைக் காய்ச்சல் தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதம் கிடைத்தவுடன், தமிழக சுகாதாரத் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதன்படி, காகம், கோழி போன்ற பறவைகள் திடீரென காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இறந்தால் அவற்றை உடனடியாக ஆழமாக குழி தோண்டி புதைக்க வேண்டும். நோயால் இறந்த கோழியின் இறைச்சியை உண்ண வேண்டாம்.
இறைச்சிக்காக வெட்டப்படும் கோழிகளைக்கூட நன்றாக சமைத்தே உண்ண வேண்டும். பாதி வேக வைத்த மாமிசங்களைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான சுகாதார அலுவலா்கள் அதைப் பின்பற்றி கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனா். கடந்த 9-ஆம் தேதி தலைமைச் செயலா் இதுதொடா்பாக அனைத்து அதிகாரிகளுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளாா்.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பறவைக் காய்ச்சல் தடுப்பு: கோழிப் பண்ணையாளா்களுடன் ஆலோசனை
வெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; விரைவில் திறக்க நடவடிக்கை!

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை! பொது சுகாதாரத் துறை!!

14 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல்: தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


