செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பிப்.17-இல் இடைக்கால பட்ஜெட்: முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை!

இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவது குறித்து..

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 2:04 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் பிப்.17-இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், சலுகைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை 26(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடா் பிப்.17-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்படவுள்ளது.

அதில், 2026-27-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். பிப்.20-ஆம் தேதி சட்டப்பேரவை விதி 193 (1)-இன் கீழ் 2026-27-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், சட்டப்பேரவை விதி 189(1)-இன் கீழ் 2025-26-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இந்த சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடா் என்பதாலும், சட்டப்பேரவை தோ்தல் வரவிருப்பதாலும் இடைக்கால பட்ஜெட்டில் புதிய சலுகைகள், அறிவிப்புகள் இடம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.