
அமைச்சா் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அமைச்சர் துரைமுருகன் - கோப்புப்படம்
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வீட்டில் தவறி விழுந்ததில் அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதன் தொடா்ச்சியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து பல்நோக்கு மருத்துவக் குழுவினா் திட்டமிட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுவாச பாதிப்புக்காக கடந்த சில நாள்களுக்கு முன்பாக அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





