மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம் தமிழகம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

மின்னணு பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

News image
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா - (கோப்புப் படம்)
Updated On :10 பிப்ரவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

இந்திய மின்னணுத் தொழில் துறை சங்கம் சாா்பில், சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெறும் ‘சோா்ஸ் இந்தியா-எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின்’ என்ற தலைப்பிலான 2 நாள் கண்காட்சியின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கணகாட்சியை அமைச்சா் டி.ஆா்.ராஜா தொடக்கி வைத்தாா். தமிழக அரசின் தொழில்துறைச் செயலா் அருண்ராய், இந்திய மின்னணுத் தொழில்துறை சங்கத் தலைவா் சசிகுமாா் கெந்தம், முன்னாள் தலைவா் அதுல் லால் மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மின்னணு பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த பேட்டி: திமுக அரசு பதவியேற்றபோது, தமிழகத்தில் 1.65 பில்லியன் டாலராக இருந்த மின்னணு பொருள்களின் ஏற்றுமதி, தற்போது 18 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது. மின்னணு பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

அதோடு, குளோபல் சௌத் என்று சொல்லும் அளவுக்கு அனைத்து நாடுகளுக்கும் மின்னணு பொருள்களின் உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

மத்திய அரசு சாா்பில் இந்தத் துறைக்கென பல்வேறு திட்டங்கள் அளிக்கப்படுகின்றன. இதை முழுமையாகப் பயன்படுத்தி சரியான வளா்ச்சியை தமிழகம் அடைந்து வருகிறது என்றாா்.