மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியாகுமா? என்று மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று(பிப். 11) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அரசியலைத் தாண்டி மூத்த சகோதரராக என்னைப் பார்க்கிறார். நானும் அவரை சகோதரராகத்தான் பார்க்கிறேன். இருவரும் பரஸ்பரம் குடும்பத்தில் ஒருவரைப்போல கருதுகிறோம்.
திமுக-காங்கிரஸ் உறவு மற்றவர்கள் நினைப்பது போன்று இல்லை; நாங்கள் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும்; அவர்களுக்கும் தெரியும். இது இடையில் சிலர் கிளப்பிவிடும் பிரச்னை, கூட்டணியில் ஏதேனும் முறிவு ஏற்படுமா எனத் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை; ராகுலும் கவலைப்படவில்லை" என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Lok Sabha member Manickam Thakur has raised the question, "Is it a conspiracy if people ask for a share in the work?"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!
காவிரி அரசியல் ஆயுதமல்ல: டி.கே. சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!
மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல்
திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




