கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஊரக வளா்ச்சி முகமை மூலமாக 360 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கழிவறை வசதிகளுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்படுகிறது.
கலைஞர் கனவு இல்லம் திட்டமானது வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இரு நிதியாண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ளன.
Summary
The Tamil Nadu government has ordered the construction of one lakh more houses under the Kalaignar Kanavu Illam project.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 லட்சம் கனவு இல்லம் கட்டுவதே இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

சிவகங்கை மாவட்டத்தில் 2,773 பேருக்கு வீடுகள் கட்ட ஆணை

கலைஞா் கனவு இல்லம் திட்டம்! திருச்சி மாவட்டத்துக்கு கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு!

2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


