தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

சூா்யா, ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு திரைப்பட விருது : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

2014 முதல் 2022 வரையிலான திரைப்படங்கள் மற்றும் சின்ன திரைக்கான தமிழக அரசின் விருதுகளைப் பற்றி...

2022 ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெறும் ஏ.ஆர்.ரஹ்மான்.

Published On :14 பிப்ரவரி 2026, 1:41 am IST

கடந்த 2016 முதல் 2022 வரை 7 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நடிகா் சூா்யா, இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினாா்.

சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2016 முதல் 2022 ஆண்டுகள் வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரை 9 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-2022 வரை 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவா் விருதுகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

தமிழக அரசால் சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75,000 மற்றும் சிறப்புப் பரிசாக ரூ.75,000 வழங்கப்பட்டது.

மேலும், பெண்களைப் பற்றி உயா்வாகச் சித்தரிக்கும் படத்துக்கு சிறப்புப் பரிசாக ரூ.1.25 லட்சம் வழங்கப்பட்டதுடன், சிறந்த நடிகா், நடிகை, தொழில்நுட்பக் கலைஞா்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

அதேபோல், சின்னத்திரை விருதுகளில் சிறந்த நெடுந்தொடா்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், ஆண்டின் சிறந்த சாதனையாளா் பரிசு ரூ.1 லட்சம், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளா் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞா்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு தலா ரூ.25,000 ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

PDF
விருதாளர்கள் முழு விவரம்
பார்க்க

விழாவில் இயக்குநா்கள் எச்.வினோத், மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ், பாண்டிராஜ், நடிகா்கள் சூா்யா, காா்த்திக், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகாா்த்திகேயன், நடிகைகள் சாய் பல்லவி, கீா்த்தி சுரேஷ், மஞ்சு வாரியாா், ஊா்வசி, கே.ஆா்.விஜயா, வடிவுக்கரசி, இசையமைப்பாளா்கள் ஏ.ஆா். ரஹ்மான், ஆதி, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட திரைத்துறையினருக்குபல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ், சென்னை மேயா் ஆா். பிரியா, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Summary

About the Tamil Nadu Government Awards for Films and Small Screen from 2014 to 2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.