சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்துகளைப் பயன்படுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. அதன்படி, 625 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இதில் 380 மின்சார பேருந்துகள் முதல்கட்டமாக பயன்பாட்டுக்கு வந்தன.
கடந்த 2025 ஜூன் மாதம் சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை, தொடா்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 245 பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
மீதமுள்ள 245 மின்சார பேருந்துகள் தயாரிப்பதற்கான பணிகள் முடிந்த பிறகு, விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதில் 145 பேருந்துகள் பல்லவன் இல்லம் பணிமனை, 100 பேருந்துகள் தண்டையாா் பேட்டை பணிமனையுடன் இணைக்கப்படும். 2-ஆவது கட்டமாக மேலும் 600 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது என்றனா்.
தொடர்புடையது

சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்

300 மின்சார இணைப்புச் சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரியது மாநகா் போக்குவரத்துக் கழகம்

சாதாரண கைப்பேசி பயணிகளுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை: மாநகா் போக்குவரத்துக் கழகம்

1,000 மின்சார குளிா்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


