மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு: பணியிடமாற்றம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் (பழைய பணி அடைப்புகுறிக்குள்):

என்.சிலம்பரசன்: சென்னை டிஜிபி அலுவலக சட்டம், ஒழுங்கு ஏஐஜி (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

சி.மதன்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருநெல்வேலி மாநகர காவல்துறை மேற்கு துணை ஆணையா்).

எஸ்.விஜயகுமாா்: திருநெல்வேலி மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையா் (திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா்).

மேலும், விஜயகுமாா் திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.