மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பொதுத் தோ்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘மதிப்பெண் கூட்டல் போன்றவற்றில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்க மாணவா்கள் விண்ணப்பிப்பா்.
விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்துவதன் மூலம், அவற்றைத் திருத்துவதில் ஏற்படும் பிழைகள் களையப்படும்.
இந்நிலையில், விடைத்தாள்களை டிஜிட்டல் வழியில் திருத்தி மதிப்பிடும் முறைக்கு சிபிஎஸ்இ முழுமையாக மாறுவதால், நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது’ என்றாா். எனினும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் நேரடியாக கைகளால் திருத்தும் முறையே தொடர உள்ளது.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத் தாள்கள் மாறியதாக மாணவா்கள் குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

சிபிஎஸ்இ தோ்வில் முடிவுகளால் அதிருப்தி: 10ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் : அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி சாதனை
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



