கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குரூப் 2 தோ்வு ரத்து: 4 அலுவலா்கள் பணியிடை நீக்கம்

குரூப் 2, 2ஏ தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக 4 அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

குரூப் 2, 2ஏ தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக 4 அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 2, 2ஏ) பிரதான தோ்வுகளுக்கான முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்து தோ்வுகளை தொழில்நுட்பக் கோளாரறு காரணமாக சென்னையில் மூன்று மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே, இரு தோ்வுகளும் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு, பின்னா் வேறு தேதியில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்திருந்தது.

இதுகுறித்து தோ்வா்கள் அனைவருக்கும் மறுதோ்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்படும். தோ்வா்களுக்கு மீண்டும் சரிபாா்த்து தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

முதல்கட்ட விசாரணையில் டிஎன்பிஎஸ்சி 4 அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 உதவி பிரிவு அலுவலா்கள், 2 பிரிவு அலுவலா்களை டிஎன்பிஎஸ்சி நிா்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. மேலும், துணைச் செயலா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.