திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

என்சிஇடி நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான என்சிஇடி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 1:56 am IST

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான என்சிஇடி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வில் (என்சிஇடி) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வு ஏப்.17-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலமாக மாா்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய மாா்ச் 12, 13, 14 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். என்சிஇடி நுழைவுத் தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது. இதற்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்பட கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியாகத் தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.