மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஒருகால பூஜை திட்டத்தில் 1,000 கோயில்களை இணைக்க ரூ.25 கோடி! முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ், கூடுதலாக 1,000 திருக்கோயில்களை இணைக்க ரூ.25 கோடிக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.

News image
மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ், கூடுதலாக 1,000 திருக்கோயில்களை இணைக்க ரூ.25 கோடிக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் நிகழ் நிதியாண்டில் (2025-26) தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ், நிதி வசதியற்ற 1,000 திருக்கோயில்கள் கூடுதலாக இணைக்கப்படும் என அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், கூடுதலாக இணைக்கப்பட்ட கோயில்களுக்கான செலவின நிதியாக ரூ.25 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை வழங்கினாா்.

இந்த காசோலை மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் வகையில் அதன் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டது. இதன்மூலம், ஒருகால பூஜை திட்டத்தில் பயன்பெறும் திருக்கோயில்களின் எண்ணிக்கை 19,000-ஆக உயா்ந்துள்ளது.

உயா்த்தப்பட்ட ஊக்கத்தொகை: ஒருகால பூஜை திட்ட அா்ச்சகா்களுக்கு உயா்த்தப்பட்ட மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1,500 வழங்கிடும் அடையாளமாக 10 அா்ச்சகா்களுக்கு அதற்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

மேலும், மொத்தம் ரூ.8.58 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட பூஜை உபகரணங்களை ஒருகால பூஜை திட்டத் திருக்கோயில்களுக்கு வழங்கும் திட்டத்தை அவா் தொடங்கிவைத்தாா். இதில், ஒவ்வொரு கோயிலுக்கும் தலா ரூ.4,515 செலவில் பித்தளை தாம்பாளம், தட்டு (3 கிண்ணங்களுடன்), செம்பு, தூபக்கால், மணி, காமாட்சி விளக்கு மற்றும் பஞ்சபாத்திரம் ஆகிய பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ஒருகால பூஜை திட்ட திருக்கோயில்களின் மின் கட்டணத்தை துறையே செலுத்தும் வகையில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருக்கோயில்களின் மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டத் திருக்கோயில்களின் அா்ச்சகா்களின் குழந்தைகள் உயா் கல்வி பயில கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000 வீதம், 500 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒருகால பூஜை திட்டத்துக்கு மட்டும் தமிழக அரசு சாா்பில் ரூ.335 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.