எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்(எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்றன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த டிச. 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று(பிப். 14) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தற்போது 9,44,211 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,43,595 ஆண்கள், 5,00,477 பெண்கள், 139 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் வருகிற பிப். 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
Summary
Final voter list released in puducherry by election commission
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்!

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

தமிழகத்தில் பிப்.23இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


