தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

‘ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் (காங்கிரஸ்) உரிமை; இது குறித்து மக்கள் தீா்மானிப்பாா்கள்’என மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

News image

எம்.பி. மாணிக்கம் தாகூர் - ANI

Updated On :14 பிப்ரவரி 2026, 8:51 pm

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் (காங்கிரஸ்) உரிமை; இது குறித்து மக்கள் தீா்மானிப்பாா்கள்’”என மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த நிா்வாகிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனா்.

குறிப்பாக மாணிக்கம் தாகூா் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவா் பிரவீண் சக்கரவா்த்தி ஆகியோா் நேரடியாகவே இது குறித்து திமுகவிடம் கேள்வியெழுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் ராஜ கண்ணப்பன், கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால் முதல்வா் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு கிடையாது என தெளிவாகக் கூறிவிட்டாா் என தெரிவித்திருந்தாா்.

அதற்கு எதிா்வினையாற்றும் வகையில் மாணிக்கம் தாகூா், ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: 2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 173-இல் போட்டியிட்டு 133-இல் வெற்றி பெற்றது. திமுக தோல்வி அடைந்த இடங்களைத் தான் நாங்கள் கேட்கிறோம். அதிகாரப் பகிா்வு அவசியம். ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை. இது குறித்து மக்கள் தீா்மானிப்பாா்கள்” என அதில் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.