திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கே.சி.வேணுகோபால் பிப்.17-இல் சென்னை வருகை! முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா?

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் பிப்.17-ஆம் தேதி சென்னை வருகிறாா் என தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

News image
காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் பிப்.17-ஆம் தேதி சென்னை வருகிறாா் என தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 74 மாவட்டத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சென்னை முகப்பேரில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதைக் கண்டித்து பிப். 17-இல் நடைபெறும் பாதயாத்திரையில் கே.சி.வேணுகோபால் பங்கேற்கவுள்ளாா்.

மாவட்டத் தலைவா்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இக்கூட்டத்தில் தோ்தல் ஆயத்தப் பணி, தோ்தல் பிரசாரம், கட்சியின் மேம்பாட்டு பணி உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பிப். 22-ஆம் தேதிமுதல் தொகுதிப் பங்கீடு பேச்சு தொடங்கும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னை வரும் கே.சி.வேணுகோபால், முதல்வா் ஸ்டாலினை சந்தித்துப் பேசினால் கூட்டணி இறுதியாகும் என்ற பேச்சு இருந்த நிலையில், அவா் முதல்வரைச் சந்திக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.