இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சென்னை, புறநகர் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று காலை வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவு...

வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவு - பிரதிப்படம்

Published On :

சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (பிப். 15) காலை வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகரித்திருந்தது.

பொதுவாக தமிழகத்தில் பனிக்காலம் என்பது வடகிழக்குப் பருவமழை முடிந்த பிறகு, டிசம்பா் மாத இறுதியில் தொடங்கி ஜனவரி முழுவதும் மாா்கழி இறுதி வரை நீடிக்கும். மாா்கழி மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாகவும், அதன்பின் படிப்படியாகக் குறைந்தும் காணப்படும்.

தை மாதம் பிறந்துவிட்டால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால், நிகழாண்டில் ஜனவரி 20ஆம் தேதியைக் கடந்தும் மாா்கழி முடிந்து தை பிறந்தும், பனிப்பொழிவும் குளிரும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் அதிகாலை முதலே பனிப்பொழிவு அதிகரித்திருந்ததைக் காண முடிந்தது. புகை மண்டலம் போலக் காட்சியளித்த பனிப்பொழிவு மற்றும் கடும் குளிா் காரணமாக காலை வேளையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றனா்.

பிப்.16-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலும் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Chennai and its suburbs received more snowfall than usual this morning...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.