இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்லர் : பிரதமருக்கு கடிதம்

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைச் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை..
நரேந்திர மோடி / மு.க. ஸ்டாலின்
நரேந்திர மோடி / மு.க. ஸ்டாலின்கோப்புப் படங்கள்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைச் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1. இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிக்கத் தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

2. இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை அல்லது விசா விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, தற்போதுள்ள நடைமுறையில் கடவுச்சீட்டு & விசா தேவைகளைத் தள்ளுபடி செய்யும் நிர்வாக விளக்கத்தை வழங்க வேண்டும்.

3. மாவட்ட ஆட்சியர் & எஸ்.பி-க்குக் குடியுரிமை & விசா விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும்.

4. 9-1-2015 வரை இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களை 'சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்' எனக் கருதக்கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் இந்திய அரசின் ஆதரவோடும் ஒப்புதலோடும் இங்கு வந்தவர்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மண்ணில் வாழ்ந்து வருபவர்கள். அதிலும் 40% பேர் நம் மண்ணில் பிறந்தவர்கள்!

எனவே, அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களாகக் கருதிடக் கூடாது. அவர்களுக்கான குடியுரிமை உள்ளிட்ட சட்டப்பூர்வமான தீர்வுகளை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி / மு.க. ஸ்டாலின்
அப்பா வழியில் முதல்வரானவர் மு.க. ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி
Summary

Sri Lankan Tamils ​​are not illegal immigrants: Letter to Prime Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com