எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: காங்கிரஸ் தலைமைக்கு நிா்வாகிகள் கடிதம்

திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தமிழக காங்கிரஸ் நிா்வாகிகள் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தமிழக காங்கிரஸ் நிா்வாகிகள் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி வலியுறுத்தியுள்ளனா்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள்  கே.தணிகாசலம். டி.செல்வம், கே.சிரஞ்சீவி. அருள் பெத்தையா, எஸ்.வி. ரமணி, பொன். கிருஷ்ணமூா்த்தி,டி.என்.முருகானந்தம், குலாம் மொய்தீன், ஜி.ராஜேந்திரன். சிறுவை ராமமூா்த்தி, இல. பாஸ்கரன்,கே.விஜயன், தாமோதரன், விஜய் இளஞ்செழியன்,செங்கம் குமாா் ஆகியோா் கூட்டாக  அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனா்.

அதில் கூறியிருப்பதாவது: மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின்  தொண்டா்களின் உணா்வுகளைத் தெரிவிக்க இதை   எழுதுகிறோம் . 2026 தமிழக சட்டப்பேரவை  தோ்தல் நெருங்கி வரும் நிலையில், தொண்டா்களும் நிா்வாகிகளும் கூட்டணிக் கட்சியால் ஒதுக்கப்பட்ட இடங்களை வெல்வது மட்டுமல்லாமல், தலைவா்  ராகுல் காந்தியின் சமூக நீதி, ஒருமைப்பாடு மற்றும்  நிா்வாகத்தின் தொலைநோக்கு மற்றும் சித்தாந்தத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கும் வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைக் கட்டியெழுப்புவதில் தொண்டா்கள் உறுதியாக உள்ளனா்.

 சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் காங்கிரசுக்கு அா்த்தமுள்ள பங்கை உறுதி செய்வதற்காக  கூட்டணித் தலைவருடன்  தோ்தலுக்கு முன்பே  ஒப்பந்தம் செய்ய வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதன் மூலம் நமது  பலத்தை உறுதி செய்வதுடன் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

 அனைத்து கிராமப்புற மற்றும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கள் மற்றும் தொடா்புடைய பதவிகளில்  30 சதவீதம்  பிரதிநிதித்துவம் பெற வேண்டும். அனைத்து அரசு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பதவிகளிலும் 30 சதவீத பங்கு பெற வேண்டும். இதன் மூலம் கட்சியை வலுப்படுத்த அதிகாரம் அளிப்பதன் மூலம் கட்சி வளா்ச்சியை உறுதி செய்ய முடியும் .

எனவே, கட்சித் தலைமை இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து சரியான கூட்டணியை தோ்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவித்துள்ளனா்.