நாளை பட்ஜெட்! தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு!

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.
tngovt
தமிழக அரசு
Updated on
1 min read

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 16) வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வர் மு. க. ஸ்டாலின் மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை, இன்று(பிப். 16) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-26, கடந்த ஐந்து ஆண்டிற்கான மாநிலத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை எடுத்துரைக்கிறது.

இவ்வறிக்கை 10 அத்தியாயங்களில் பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் அவை எவ்வாறு செயல்பட்டது என்பதை விரிவாக விளக்குகிறது

இவ்வறிக்கையானது, மாநிலத்தின் பொருளாதார செயல்பாடுகளை விளக்குவதுடன், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இணையான தனிநபர் வருமானம் ஆகிய இரு இலக்குகளையும் அடைய கவனிக்க வேண்டிய பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த பொருளாதார ஆய்வறிக்கை, கொள்கை வகுப்பாளர்கள், வணிகம், தொழில்வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகிறது.

பொருளாதார போக்குகளை ஆவணப்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் எதிர்கால மேம்பாட்டு உத்திகளை வடிவமைப்பதற்கும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான கருவியாக செயல்படும்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் திரு என். முருகானந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் நாளை(பிப். 17) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 16) வெளியிட்டார்.

2026-27-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். பிப்.20-ஆம் தேதி சட்டப்பேரவை விதி 193 (1)-இன் கீழ் 2026-27-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், சட்டப்பேரவை விதி 189(1)-இன் கீழ் 2025-26-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

Summary

Chief Minister Stalin today (Feb. 16) released the Tamil Nadu Economic Survey for the year 2025-2026, prepared by the State Planning Commission.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com