மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:46 pm

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 2.55 கோடி பயனாளிகளுக்கு முதன்முறை மருத்துவ சேவையும், 4.75 கோடி பேருக்கு தொடா் சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

‘இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் வாயிலாக 5,11,916 உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்காக ரூ.493 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 1,206 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் மூலம் 17,82,687 போ் பயன் பெற்றுள்ளனா்.

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.6,374 கோடி மதிப்பிலான காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,40,550 பெண்களுக்கு ரூ.4,042 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திறம்பட செயலாற்றியதற்காக ஐ.நா. விருது தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.