தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

பொங்கல் பரிசு, உரிமைத் தொகை செலவுகளை சமாளித்தது எப்படி? தங்கம் தென்னரசு விளக்கம்

பொங்கல் பரிசு, மகளிர் தொகை என கூடுதல் செலவிகளை சமாளித்தது எப்படி? என்பது குறித்து தங்கம் தென்னரசு விளக்கம்

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. - படம்: TNDIPR

Published On :

சென்னை: தமிழக மக்களுக்கு ஜனவரி மாதம் பொங்கல் பரிசு, பிப்ரவரி மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை என கூடுதல் செலவுகளை சமாளித்தது எப்படி? என்பது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

தமிழக பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவிருப்பதால், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

அண்மையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது போன்ற கூடுதல் செலவினங்கள் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

இது குறித்து பட்ஜெட்டில் பேசிய தங்கம் தென்னரசு, குடும்பத்துக்கு ரூ.3000 வீதம் பொங்கல் பரிசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவியாக 5,000 ரூபாயை பிப்ரவரி மாதத்தில் வழங்கியது என ஒட்டுமொத்தமாக தமிழக அரசு 10,849 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளது.

இவ்வாறான கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளபோதும், வளர்ச்சி சாராத செலவினங்களில் ஏற்படக்கூடிய சேமிப்பின் காரணமாக, ஒட்டுமொத்த செலவினங்களின் உயர்வு 5,713 கோடி ரூபாயாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினங்கள் 3,93.272 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 3.79 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.