சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கருணாநிதி கவலையோடு பதிவு செய்த சூழல் இன்னமும் மாறவில்லை: தங்கம் தென்னரசு

முன்னாள் முதல்வர் கருணாநிதி, கவலையோடு பதிவு செய்த சூழல் இன்னமும் மாறவில்லை என தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

News image

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

Updated On :17 பிப்ரவரி 2026, 12:50 pm IST

முன்னாள் முதல்வர் கருணாநிதி கவலையோடு பதிவு செய்த சூழல் அரைநூற்றாண்டுக் காலம் கழிந்த பிறகும் மாறவில்லை என்பது வருந்தத்தக்கது என தமிழக இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து குறிப்பிட்டுப் பேசுகையில், 55 ஆண்டுகளுக்கு முன்பு, கருணாநிதி, 1971 - 72ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட அறிக்கையில்,

வரி விதிக்கும் உரிமை மத்திய அரசிடம் குவிந்து கிடக்கிறது. ஆனால் மக்கள் நலனைப் பேணிப் பெருக்குவதற்கான பங்கு மாநில அரசுகளிடம் நிறைந்து கிடக்கிறது. உரிமை ஒரு புறமும் கடமைப் பொறுப்பு மற்றொரு புறமும் இருக்கும்படியான விந்தை நிலைதான் நமது அனைத்துக் சிக்கல்களுக்கும் காரணம். எனவே, நிதி வருவாயைப் பகிர்ந்துகொள்ளும் தற்போதையை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என கருணாநிதி கவலையோடு பதிவு செய்த சூழல் அரைநூற்றாண்டுக் காலம் கழிந்த பிறகும் மாறவில்லை என்பது வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது நிதிக்குழுவின் இந்த அறிக்கை தமிழ்நாட்டிற்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களும், மத்திய வரிகளின் பகிர்ந்தளிக்கத்தக்க நிதியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க வேண்டுமெனத் தெளிவாகக் கோரியிருந்த போதிலும், மாநிலங்களுக்கான பங்கானது 41 சதவீதமாகத் தொடர்வதாக நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது குறித்து மாநில அரசுகள் முன்வைத்த கோரிக்கைகள் மீது நிதிக் குழுவின் அறிக்கையில் எந்தவிதமான பரிந்துரையும் இடம்பெறவில்லை என்பது வருந்தத்தக்கது என்று பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.