சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பெருந்தன்மை வேண்டாம்; நியாயத்தை மட்டுமே கோருகிறோம்: தங்கம் தென்னரசு

பெருந்தன்மை வேண்டாம், நியாயத்தை மட்டுமே கோருகிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

News image

இடைக்கால பட்ஜெட்

Updated On :17 பிப்ரவரி 2026, 2:02 pm IST

சென்னை: மத்திய அரசிடம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை, சமநிலையினை உறுதி செய்யும் நியாயத்தை மட்டுமே கோருகிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் நிறைவாக சில கவலைகளை வெளியிட்டிருந்தார்.

அதில், மாநிலங்களுக்கிடையிலான கிடைமட்டப் பகிர்வில், மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமான பங்கு வழங்கப்படாமல் நிதிக்குழு பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளது.

ஒன்பதாவது நிதிக்குழு காலத்தில், தமிழ்நாட்டிற்கான பங்கு 7.931 சதவீதமாக இருந்த நிலையில், தொடர்ந்து வந்த நிதிக் குழுக்கள் அதனைக் குறைத்து வந்தன.

இந்தப் பங்கு அண்மையில் 4.079 சதவீதமாகக் குறைந்ததால் தமிழகத்துக்கு 3.17 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது, தமிழ்நாடு அரசின் நிலுவைக் கடனில் சுமார் 33 சதவீதத்திற்குச் சமமானதாகும்.

நிலை இவ்வாறு இருக்க, பதினாறாவது நிதிக்குழு பரிந்துரைகளில், நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு முறையே 23.74 மற்றும் 13.27 சதவீத அளவில் உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வெறும் 0.44 சதவீதம் என்ற மிகச் சிறிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது;

இது, ஒப்பிடத்தக்க மாநிலங்களுள் மிகவும் குறைவானதாகும். நாம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை. சமநிலையினை உறுதி செய்திடும் நியாயத்தை மட்டுமே கோரியிருந்தோம் என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.

பதினாறாவது நிதிக்குழுவும் அந்த வகையில் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.