மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி பதிவாகியுள்ளது.
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படகிறது.
புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
இதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம்
மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்துத்துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும்!
சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு என ரூ.17,088 கோடி ஒதுக்கீடு
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு!
2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன.
2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு!
விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.
6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.
பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை
மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த திட்டத்தின்கீழ் இதுவரை 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன.
இல்லங்களின் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாடு முழுவதும் போற்றும் திட்டமாக உள்ளது. பிற மாநிலங்களும் பின்பற்றும் திட்டமாக உள்ளது.
இந்த திட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.6500 கோடி நிதியை தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் கரங்களில் தவழச் செய்துள்ளோம். அதிகாலையிலேயே வங்கிகளில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது.
சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் தமிழகத்தில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழக இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.
செயற்கை நுண்ணணுறவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் என்றார்.
திருக்குறளை பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் சட்டப்பேரவையில் பகிர்ந்துகொண்டார்.
பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழைப் பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்றார்.
பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.
ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
தோ்தல் ஆண்டு என்பதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.