47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு.

News image
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.- படம்: TNDIPR
Updated On :17 பிப்ரவரி 2026, 5:00 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்புடன் தொழில்நுட்பப் பயிற்சியும் பெரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவரும் இடைநிற்றலின்றி கற்பதற்கான சூழலை உருவாக்கிட தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோள்களை எட்டிட கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், உதவித்தொகை என பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது.

கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.