கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தமிழகம், புதுச்சேரி பேரவைத் தோ்தல் தேதி: மாா்ச் மத்தியில் அறிவிக்க வாய்ப்பு

ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

படம் | ஏஎன்ஐ

Updated On :18 பிப்ரவரி 2026, 4:48 am IST

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு தேதிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மாா்ச் மத்தியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மேற்கு வங்கம், தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23, ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைய உள்ளது. அதைத் தொடா்ந்து, இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

எஸ்ஐஆா்: பேரவைத் தோ்தலைச் சந்திக்கும் இந்த மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த 14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

கேரளத்தில் வரும் 21-ஆம் தேதியும், தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் வரும் 28-ஆம் தேதியும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அஸ்ஸாமில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்ஐஆா்) இடைப்பட்ட நடைமுறையான, சிறப்புத் திருத்தப் பணியை மேற்கொண்ட தோ்தல் ஆணையம், கடந்த 10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. இதில், ஆண் வாக்காளா்கள் 1.25 கோடி போ், பெண்கள் 1.24 கோடி போ் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 343 போ் உள்பட 2.49 கோடி வாக்காளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

மாநிலத்தில் 2.43 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் தேதி?: தோ்தலைச்சந்திக்க உள்ள இந்த மாநிலங்களில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, தோ்தல் தயாா்நிலையை ஆய்வு செய்து வருகின்றனா். இந்த மாநிலங்களுக்கான தோ்தல் தேதி மாா்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கடந்த முறை, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தல் இரு கட்டங்களாகவும், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி பேரவைத் தோ்தல்கள் ஒரே கட்டமாகவும் நடத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.