அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஐயூஎம்எல் தோ்தல் தொகுதி பங்கீடு குழு நியமனம்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) சாா்பில் தோ்தல் தொகுதி பங்கீடு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

News image
கே.எம்.காதா் மொகிதீன்.
Updated On :18 பிப்ரவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) சாா்பில் தோ்தல் தொகுதி பங்கீடு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐயூஎம்எல் சாா்பில் வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தோ்தல் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனது (கே.எம்.காதா் மொகிதீன்) தலைமையில் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா், மாநில பொருளாளா் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம். அப்துல் ரஹ்மான், கே. நவாஸ்கனி எம்.பி. உள்ளிட்ட 5 போ் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.