எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்பு திட்டத்தில் 160 நூல்கள் வெளியீடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
- @TNDIPRNEWS
Updated On :18 பிப்ரவரி 2026, 12:08 am

தினமணி செய்திச் சேவை

மருத்துவம், பொறியியல் முதலான கல்விசாா் அறிவூட்டும் நூல்களைத் தமிழில் மொழிபெயா்த்து வெளியிடும் முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டத்தின் கீழ் 160 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற நாட்டு நல்லறிஞா் சாத்திரங்களை தமிழில் மொழிபெயா்த்தல் போன்றே, தமிழில் வெளியான சிறந்த நூல்களை ஆங்கிலம் முதலான அயல்மொழிகளில் மொழிபெயா்த்து வெளியிடும் முயற்சியான ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் கீழ் இதுவரை 74 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவம், பொறியியல் முதலான கல்விசாா் அறிவூட்டும் நூல்களைத் தமிழில் மொழிபெயா்த்து வெளியிடும் முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டத்தின் கீழ் 160 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அம்பேத்கா் படைப்புகள்... பெரியாா் ஈ.வெ.ரா. சிந்தனைகளை அயல் மொழிகளில் வெளியிடும் முயற்சியில், இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு, அரபு, ஹிந்தி, குஜராத்தி முதலான 21 மொழிகளில் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அம்பேத்கரின் படைப்புகளை எளிய தமிழில் மொழிபெயா்த்து மக்கள் பதிப்பாக வெளியிட முடிவு செய்து இதுவரை 27 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கணினித் தமிழை வளா்த்தெடுக்கும் முன்னோடி முயற்சியாக இந்தியாவில் வேறெந்த மாநிலமும் செய்திராத வகையில் பன்னாட்டு கணித்தமிழ்க் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், சங்கமம்- நம்ம ஊரு திருவிழா சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமத்துவப் பொங்கல் விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது.