மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணனின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜான்சி ராணி மீது சென்னை காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் காயமடைந்த ஜான்சி ராணி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த சென்னை காவல்துறையினர், எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு இடங்களில் தங்கவைத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காததை மாற்றுத்திறனாளிகள் கண்டித்துள்ளனர்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜான்சி ராணி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஜான்சி ராணி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவரின் மனைவி, மாற்றுத் திறனாளிகள் மீது இரக்கமின்றி திமுக அரசு தாக்குதல் நடத்தியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Summary
Marxist Communist K. Balakrishnan's wife attacked by police! Admitted to hospital!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை: எம்.ஏ.பேபி

மார்க்சிய கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஆர். செல்லசுவாமி தேர்வு!

தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு!

தேர்தல் விதிமீறல்! விஜய் மீது நடவடிக்கை தேவை! - மார்க்சிய கம்யூனிஸ்ட்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



